உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில கால்பந்து போட்டி கிட்ஸ் கிளப் மாணவர் தேர்வு

மாநில கால்பந்து போட்டி கிட்ஸ் கிளப் மாணவர் தேர்வு

திருப்பூர் : முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி, தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இப்பள்ளி மாணவர் பஹிம், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றார். மாநில அளவிலான போட்டி, தஞ்சாவூரில் உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. தேர்வு பெற்ற மாணவரை பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா, பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !