உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பங்கு சந்தை முதலீடு ஆசை ரூ.11.40 லட்சம் கைவரிசை

பங்கு சந்தை முதலீடு ஆசை ரூ.11.40 லட்சம் கைவரிசை

திருப்பூர்: திருப்பூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, 11.40 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் கைவரிசை காட்டியது.திருப்பூர், பி.என்., ரோட்டை சேர்ந்தவர், 43 வயது மதிக்க நபர். இவருக்கு கடந்த ஆண்டு செப்., மாதம், இவரை வாட்ஸ்-அப் குழுவில் ஒன்று இணைத்தனர். குழுவில் இருந்து பேசிய பெண் ஒருவர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி நம்ப வைத்தனர். தொடர்ந்து, இதுதொடர்பான ஆப்பை பதிவிறக்கம் செய்து, பல தவணைகளாக, 11.40 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். ஆனால், லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதல் பணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர்.இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !