உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவி கர்ப்பம்; வாலிபர் கைது

மாணவி கர்ப்பம்; வாலிபர் கைது

திருப்பூர் : திருப்பூரில், பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர். திருப்பூரில், 16 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து, அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த முருகன், 20 ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். சமீபத்தில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ஆசை வார்த்தை கூறி முருகன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.  இதேபோல திருப்பூரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 42; பனியன் தொழிலாளி. இவருக்கு, பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த, நான்கு ஆண்டுகளாக பழகி வந்தார். அந்த பெண்ணுக்கு, 17 வயதில் சிறுமி உள்ளார். அவர் அரசு கல்லுாரியில் படித்து வந்தார். தனியாக இருந்த சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் விநாயக மூர்த்தி ஈடுபட்டார். கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிந்து முருகன் மற்றும் விநாயகமூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை