கலைப்போட்டியில் மாணவி முதலிடம்
உடுமலை: மாநில அளவிலான கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்தது. இதில், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மாணவி பிரித்திகாவர்ஷினி நாட்டுப்புற தனி நடனத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த மாணவிக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.