உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ்கள் வருவதில்லை: மாணவர்கள் தவிப்பு

பஸ்கள் வருவதில்லை: மாணவர்கள் தவிப்பு

அவிநாசி: அவிநாசி முதல் கூட்டப்பள்ளி வரை இயங்கி வரும் அரசு பஸ்களை முறையான நேரத்தில் இயக்கவும், கூடுதல் பஸ் வசதி கேட்டும், போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம், அவிநாசி ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் அளித்த மனு: வடுகபாளையம், நடுவச்சேரி, புஞ்சை தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அவிநாசி, திருப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதில் அவிநாசி, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு சென்று தான் படிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு சில நாட்களில் காலை, 10:00 மணிக்கு மேல் மாலை 4:00 மணி வரை எந்த பஸ்களும் இந்த வழியில் இயக்குவதில்லை. எனவே கூடுதல் பஸ் வசதிகள் ஏற்படுத்தி மற்றும் இயங்கி வரும் பஸ்களையும் முறையாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ