உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சதமடித்த பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை நெருக்கடியில் மாணவர்கள்

சதமடித்த பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை நெருக்கடியில் மாணவர்கள்

உடுமலை, ; பல முறை நுாறு சதவீத தேர்ச்சி பெற்றும், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் அமராவதிநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், வகுப்பறை பற்றாக்குறையால் நெருக்கடியான நிலையில் கல்வி கற்கும் அவல நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.உடுமலை அமராவதிநகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில், மலைவாழ் குடியிருப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளனர்.இப்பள்ளி நடுநிலையாக இருந்து, கடந்த 2008ம் ஆண்டில் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னும், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது.பள்ளியின் தரம் கல்வியோடு, கட்டமைப்புகளையும் சேர்த்து மேம்படுத்துவதால் மட்டுமே உயர்த்தப்படுகிறது.இப்பள்ளி, பெயரில் மட்டுமே உயர்நிலையாக தரம் உயர்த்திவிட்டு, மாணவர்களுக்கு போதியளவு வகுப்பறைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது, துவக்கம் மற்றும் உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.இப்பள்ளி பலமுறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நுாறு சதவீத தேர்ச்சிக்கான பாராட்டு மட்டுமே கல்வித்துறையிலிருந்து வழங்கப்படுகிறதே தவிர பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தும் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின்பு, புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கு, அமராவதிநகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அவ்விடத்தை கல்வித்துறையில் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.பள்ளி மேலாண்மைக்குழுவினர், மாவட்ட நிர்வாகத்தில் இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.கல்வித்துறையும், இப்பிரச்னைகளை முழுமையாக ஆய்வு செய்து தீர்வு காணாமல், கண்துடைப்பான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகிறது.இரண்டு அரசு துறைகளின் அலட்சியத்தால், இடநெருக்கடியின் அவதியில் படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அரசு பள்ளியின் வளர்ச்சியை அரசு துறைகளே பொருட்படுத்தாமல், போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது.இப்பிரச்னை தொடர்ந்தால், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, இப்பள்ளியில் இருக்கும் வகுப்பறைக்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை என்ற நிலைதான் உருவாகும்.தற்போது, தற்காலிகமாக மாணவர்கள் விளையாடுவதற்கு மட்டும், பள்ளியின் எதிரில் உள்ள பொதுப்பணித்துறையின் இடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.அவ்விடத்தில் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினரும், பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ