கராத்தே போட்டியில் பிரகாசித்தகதிரவன் பள்ளி மாணவர்கள்
திருப்பூர்; மங்கலம், கதிரவன் பள்ளி மாணவ, மாணவியர், மிசு-ஹா ஷிட்டோரியு தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். திருப்பூர், குலாலர் திருமண மண்டபத்தில் நடந்த, மிசு-ஹா ஷிட்டோரியு தேசிய அளவிலான ஓபன் சாம்பியன் லீக், 2025 போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து, 110க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும், 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மிசு-ஹா சிட்டோ ரியு கராத்தே - டூ அசோசியேஷன் இந்தியா அமைப்பின் முதன்மை தொழில்நுட்ப இயக்குனர் முரளிதரன், பொது செயலர் ஜெயகுமார் முன்னிலையில் போட்டி நடைபெற்றது. போட்டியில், திருப்பூர் மங்கலம் கதிரவன் பள்ளியைச் சேர்ந்த, 24 மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை பெற்று, சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், பயிற்சி வழங்கிய கராத்தே பயிற்சியாளர் விஷ்ணு ஆகியோரை, பள்ளி செயலாளர், தாளாளர், முதல்வர் ஆகியோர் வாழ்த்தினர்.