வழித்தடம் மாறிய பஸ்; மாணவர்கள் தவிப்பு
திருப்பூர்; குண்டடம், ஜேடர்பாளையத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் குள்ளாய்பாளையம், நொச்சிபாளையம், நல்லிமடம், வரப்பாளையம், இடையன்கிணறு என, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும், அந்த வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு டவுன் பஸ்சில் (எண்:12) பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக அந்த பஸ், முறையான வழித்தடத்தில் வராமல், நேராக குண்டடம் சென்று விடுகிறது. அந்த பஸ்சை நம்பியுள்ள அனைத்து மாணவ, மாணவியர் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.