உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனத்தில் மாணவர்கள் பயணம்; பெற்றோர் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

வாகனத்தில் மாணவர்கள் பயணம்; பெற்றோர் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை; புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளதையொட்டி, பள்ளி மாணவர்கள் காலை நேரங்களில் நகர வீதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் செல்கின்றனர். சைக்கிள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.தொலைதுாரத்திலிருந்து பஸ்சில் வரும் மாணவர்கள், பஸ் ஸ்டாண்டிலிருந்து நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்குச்செல்கின்றனர். மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல், முறையான ஓட்டுநர் பயிற்சி உரிமம் இல்லாமல் வாகனங்களில் செல்கின்றனர்.காலை நேரங்களில், பரப்பரபான ரோடுகளில் அதிக வேகத்திலும் செல்கின்றனர். ஆபத்தை உணராமல் மாணவர்கள் இவ்வாறு பயணம் செய்வதால், எதிரே வருவோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.வாகனங்களை முந்திச்செல்வதற்கு அருகிலுள்ள பிரிவு ரோடுகளை கவனிக்காமல் சென்று, மற்ற வாகன ஓட்டுநர்களையும் விபத்துக்குள்ளாக்குகின்றனர்.போக்குவரத்து போலீசார், இவ்வாறு சாலைகளில் அதிவேகத்துடன் செல்லும் பள்ளி மாணவர்களை எச்சரிக்க வேண்டும்.முறையான பயிற்சி இல்லாமல், ஓட்டுநர் பயிற்சி உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை ஓட்டுவதை பெற்றோரும் கட்டுப்படுத்த வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை