உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஐம்பெரும் விழாவில் கலக்கிய மாணவியர்

 ஐம்பெரும் விழாவில் கலக்கிய மாணவியர்

திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா, குழந்தைகள் தின விழா, மகிழ் முற்ற மாணவியரை கவுரவிக்கும் விழா, ஸ்வீப் துவக்க விழா என ஐந்து விழா நடந்தது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் டார்ச் ஏற்றி துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், 36வது வார்டு கவுன்சிலர் திவாகரன், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பி.டி.ஏ., உறுப்பினர்கள், முன்னாள் மாணவியர் அமைப்பினர் பங்கேற்றனர். விழாவில், கடந்த ஒரு ஆண்டில், கல்வி மற்றும் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவையொட்டி, மாணவியர் குழுவின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை