உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ வளர்க்க மானியம் தேவை

மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ வளர்க்க மானியம் தேவை

உடுமலை, ; உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், பல ஆயிரம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னந்தோப்புகளில், பல்வேறு காரணங்களால், தேங்காய் உற்பத்தி குறைகிறது.குறிப்பாக, களைகளை கட்டுப்படுத்த, அதிக மருந்து தெளிப்பதால், நன்மை செய்யும் பூச்சிகளும், பாதிக்கப்படுகின்றன. தேனீக்களை ஈர்க்கும், சிறு செடிகளும், அதிக பூச்சிக்கொல்லி தெளிப்பால், கருகி விடுகின்றன. இதனால், மகரந்த சேர்க்கை குறைந்து, தென்னை மரங்களில், காய்ப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. அயல் மகரந்த சேர்க்கையை, அதிகரிக்க, தேனீ வளர்ப்பு உதவும் என தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரைக்கின்றனர்.தென்னந்தோப்புகளில், தேனீ பெட்டிகள் வைத்து, பராமரிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், போதிய வழிகாட்டுதலும், தேனீ வளர்ப்பு பெட்டி வாங்குவதற்கான மானியமும் கிடைப்பதில்லை.முன்பு, தோட்டக்கலைத்துறை சார்பில், இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது. மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வளர்ப்பு பயிற்சியை வட்டார வாரியாக வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை