உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல் மருத்துவத்தில் முழு பாதுகாப்பு சுந்தரம் மருத்துவமனை உத்தரவாதம்

பல் மருத்துவத்தில் முழு பாதுகாப்பு சுந்தரம் மருத்துவமனை உத்தரவாதம்

திருப்பூர், பி.என்., ரோட்டில் செயல்படும் சுந்தரம் பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேஷ் கூறியதாவது;எங்கள் மருத்துவமனையில், சிகிச்சைக்காக வருவோரின் பல் நலம் மட்டுமின்றி, அவர்களின் உடல் நலன் மீதும் அக்கறை காட்டுகிறோம். மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக நுழைந்தவுடன், கைகளை சுத்தம் செய்ய 'சானிடைசர்' கொடுக்கிறோம். பின், 'மவுத் வாஷ்' வாயிலாக வாய் கொப்பளிக்க செய்கிறோம். பற்களை பரிசோதிக்க ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி கருவி; தேவையான வரை, ஒரு முறை பயன்படுத்தி அகற்றப்படும், 'டிஸ்போஸபிள்' கருவி பயன்படுத்துகிறோம்.மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் கருவிகளை, முறையாக சுத்தம் செய்து, சரியான முறையில் பாதுகாக்கிறோம். மருத்துவம் பார்க்கும் அனைத்து நோயாளிகளுக்கும், புதிய துணி கொடுக்கிறோம். நோயாளிகள் அமரும் இருக்கையை, ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்கிறோம். எக்ஸ்-ரே, ஆர்.வி.ஜி., உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கு, தனித்தனி 'டிஸ்போசபிள் ஸ்டீவ்' பயன்படுத்துகிறோம். பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளும் போது, மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் பாதுகாப்பு கருதி கையுறை மற்றும் தலையுறை பயன்படுத்துகின்றனர்.நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பகிர்கிறோம். நோயாளிகளின் முழு மருத்துவ விவரங்களை அறிந்து, அதற்கேற்ப, பக்க விளைவு ஏற்படுத்தாத சரியான சிகிச்சை வழங்குகிறோம். பல் பொருத்துவது, துளை அடைப்பது, குழந்தைகளுக்கான பல் மருத்துவம் என, அனைத்து நவீன பல் சிகிச்சையும் மேற்கொள்கிறோம். குழந்தைகள் பயமின்றி, சிகிச்சை பெறுவற்கு ஏற்ப, பிரத்யேக இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முழு வாய் எக்ஸ்-ரே பரிசோதன மிக கவனமுடன் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை