உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கோவில்வழியில் அறுவைசிகிச்சைக் கூடம்

 கோவில்வழியில் அறுவைசிகிச்சைக் கூடம்

தெ ரு நாய்கள் எண்ணிக்கையும், அதன் தொல்லையும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, கோவில் வழியில் மூடப்பட்டுக் கிடந்த கட்டடத்தை புனரமைப்பு செய்து தெருநாய் அறுவைசிகிச்சை மற்றும் பராமரிப்பு கூடம் இயங்கத் துவங்கியுள்ளது. கடந்தாண்டு வரை ஒரு தெரு நாய்க்கு, 700 ரூபாய் வழங்கப்பட்டது தற்போது, 1,650 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து வந்து, அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, 7 நாள் வரை பராமரித்து மீண்டும் அதே இடத்திலேயே கொண்டு சென்று விடும் வகையில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த சேவையை பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை விடுத்தது. அவ்வகையில் தற்போது பிற பகுதிகளிலும் இந்த அமைப்பு தெரு நாய் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை