மேலும் செய்திகள்
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
03-Jan-2025
உடுமலை, ; உடுமலை அருகே, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருப்பாவை நோன்பிருக்கும், மார்கழி மாதத்தின் இறுதி உற்சவமாக 'கூடாரவல்லி', உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வையொட்டி, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், சிறப்பு வழிபாடு மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருகல்யாண உற்சவத்தின் முதல்நாள் மாலையில், ராஜ விநாயகர் கோவில் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து, ஆண்டாள் நாச்சியார் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் ரங்கமன்னார், ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் கோ பூஜையுடன் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் துவங்கியது.ஆண்டாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனை நடந்தது. அதிகாலை முதல், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திருப்பாவை பாடல்களை பாடியை, பெருமாளை வழிபட்டனர்.காலை, 10:00 மணிக்கு மேல் ரங்கமன்னார் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமண கோலத்துடன் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருக்கல்யாணத்தையொட்டி, பக்தர்களுக்கு மங்கலகயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.
03-Jan-2025