மேலும் செய்திகள்
வெற்றியை வசமாக்கிய ஜெய்வாபாய் பள்ளி மாணவியர்
03-Nov-2024
திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், சிலம்பம் போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா வரவேற்றார். வாள்சண்டை, 14 வயது பிரிவில், பத்து மாணவர், 28 மாணவியர், 17 வயது பிரிவில், 25 மாணவர், 11 மாணவியர், 19 வயது பிரிவில் ஒன்பது மாணவர், 30 மாணவியர் என, 113 பேர் பங்கேற்றனர்.போதிய நேரமின்மை காரணமாக, 19 வயது பிரிவினருக்கான சிலம்பம் போட்டி மட்டும் நடத்தப்பட்டது; இதில், 38 மாணவர், 33 மாணவியர் பங்கேற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டியில், 14 வயது பிரிவில், 38 பேர், 17 வயது பிரிவில், 32 பேர், 19 வயது பிரிவில், 44 பேர் என மொத்தம், 114 பேர் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
03-Nov-2024