வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பதவிக்கு ஏற்ற நபரை நியமனம் செய்ய வேண்டும்.
பல்லடம்; பல்லடம் தாசில்தார் அறை உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது, காத்திருந்த பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது. பட்டா மாறுதல், ஆதார், ரேஷன் கார்டு, உதவித்தொகை, நில அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, பல நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி தாலுகா அலுவலகம் வருகின்றனர். அலுவலர்களால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்காக, பொதுமக்கள், தாசில்தாரை சந்தித்துதீர்வு காண முயற்சிக்கின்றனர். இவ்வாறு, நேற்று மதியம், தாசில்தாரை பார்க்க வந்த பொதுமக்கள் பலர் வெளியே காத்திருந்தனர். தாசில்தார் அறையோ, உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின், துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர், தாசில்தார் அறையில் இருந்து வெளியே வந்தனர். பொதுமக்கள் கூறுகையில், 'பல்வேறு பணிகளுக்கு தாலுகா அலுவலகம் வரும்போது, சில உத்தரவுகளை தாசில்தாரிடம் பெற வேண்டும் என்பதால், அவரை சந்திக்க வருகிறோம். ஆனால், தாசில்தார் அறை உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வருவாய்த்துறை அலுவலர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனில், எதற்காக அறையை உட்புறமாக பூட்ட வேண்டும். அரசு அலுவலகத்தில் வெளிப்படை தன்மை வேண்டும். இவ்வாறு, உட்புறமாக பூட்டி, ரகசிய பேச்சு நடத்தும்அவசியம் என்ன?என்று தெரியவில்லை,' என்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தாசில்தார் தலைமையில் அலுவலக கூட்டம் நடந்தது. மற்றபடி எதுவும் இல்லை,' என்று சமாளித்து பதில் கூறினர்.
பதவிக்கு ஏற்ற நபரை நியமனம் செய்ய வேண்டும்.