முதல் அடியை வைத்திடு முதன்மை பெற முந்திடு
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி புதுராமகிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும், 330 மாணவர்களும், விளையாட்டு சீருடையில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 'மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை துாண்டுவதன் மூலம், அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவர்; இதற்கான அச்சாரமாக இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்' என்று கூறுகிறார், பள்ளி தலைமையாசிரியர் மோகன்.