உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழர் பாரம்பரிய கலைவிழா

தமிழர் பாரம்பரிய கலைவிழா

அவிநாசி: தமிழர் பாரம்பரிய கலை விழா மற்றும் கம்பன் கழக துவக்க விழா அவிநாசி தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. அவிநாசி வி.எஸ்.வி., காலனியில், ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆப்பிள் மழலையர் பள்ளியில் அவிநாசி தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளை சார்பில் தமிழரின் பாரம்பரிய கலை விழா மற்றும் கம்பன் கழகத் துவக்க விழா நடந்தது. தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்புசாமி, பொருளாளர் ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியன், குளம் காக்கும் அமைப்பின் தலைவர் துரை, சேவூர் கிளை தலைவர் சாமிநாதன், ராக்கியாபாளையம் கிளை தலைவர் குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கம்பன் கழக துவக்க விழாவில் பழனிச்சாமி தலைமையில், பழனியப்பா பள்ளி தாளாளர் ராஜ்குமார், முனைவர் மணிவண்ணன், அவிநாசி அத்திக்கடவு திட்ட உறுப்பினர் ஆனந்தி, வட்டாரக் கல்வி அலுவலர் மகேஸ்வரி (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் கம்பர் படம் திறந்து வைக்கப்பட்டது. மாருதி மைந்தனின் உயிரறம் என்ற நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது. செயலாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ