உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டெய்லரின் கை துண்டானது; வெட்டியவரை தேடும் போலீஸ்

டெய்லரின் கை துண்டானது; வெட்டியவரை தேடும் போலீஸ்

பல்லடம்; சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த அழகர்சாமி மகன் அன்புச் செல்வன், 22. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து கொண்டு, கரைப்புதுார், லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவரது உறவினர், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியூரை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஹரிஹரசுதன், 23. இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு, வேலை முடிந்து வீடு திரும்பிய அன்புச்செல்வன், துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கதவு தட்டப்படவே, திறந்தபோது, அரிவாளுடன் தயாராக காத்திருந்த ஹரிஹரசுதன், அன்புச் செல்வனை வெட்டி விட்டு ஓட்டமெடுத்தார். அதில், அன்புச் செல்வனின் இடது கை துண்டிக்கப்பட்டது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த அன்புச்செல்வன், ஆம்புலன்ஸ் மூலம், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவான ஹரிஹரசுதனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி