உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உழைப்பை வீணடிக்கின்றனர்: ஆசிரியர் கூட்டணி கண்டனம்

 உழைப்பை வீணடிக்கின்றனர்: ஆசிரியர் கூட்டணி கண்டனம்

பல்லடம்: பல்லடம் தாலுகா ஆபீஸ் முன், ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜசேகர் வரவேற்றார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொங்கலுார் வட்டார செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் காஞ்சனா தேவி, ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்க தலைவர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்று, வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்கள், அதன்பின், அனைத்தையும் வசதியாக மறந்து விடுகின்றனர். எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாத இந்த அரசு, சாதனை செய்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. நம்மை ரோட்டுக்கு கொண்டு வந்ததுதான் இவர்களின் மிகப்பெரிய சாதனை. முறையான பயிற்சி வழங்காமல், வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிக்காக அலைக்கழிக்கின்றனர். ஆசிரியராக நமது பணியை செய்ய விடாமல், சம்மந்தமில்லாத பணிகளை கொடுத்து, நம் உழைப்பை வீணடிக்கின்றனர். பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் என்பதே இப்போதுள்ள சூழலில் இல்லை. இவ்வாறு அவர்கள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் பல்லடம் வட்டார செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ