மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
14-Aug-2025
திருப்பூர் : திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி, 12 ஆண்டுகளாக முழு நேர பயிற்சி வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. அதில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவி நிதர்சனா வரவேற்றார். இங்கு பயின்ற மாணவர்கள் தேசிய அளவில் மதிப்பெண் பெற்றதற்கு, உறுதுணையாக இருந்து ஆசிரியர்களுக்கு விழாவில் பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து, 'இன்றைய சமுதாயத்துக்கு வலை தளங்கள் சாபமா.. வரமா,' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பட்டிமன்றம் நடந்தது. இதில், 'வரமே' என்ற தலைப்பில் மாணவியர் ஸ்ரீ லட்சுமி, கீர்த்திகா, பிரணவிகா ஆகியோரும், 'சாபமே' என்ற தலைப்பில் மாணவர்கள் சபரீஷ், சஞ்சீவ், சஞ்சித் ஆகியோரும் பேசினர். நடுவராக மாணவர் நாகராஜ் இருந்தார். முன்னதாக, அகாடமி தாளாளர் சுதாராணி சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை அகாடமியின் நிறுவனர் அருணாசலம் செய்திருந்தார்.
14-Aug-2025