உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் நியமிக்கணும்; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் நியமிக்கணும்; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

உடுமலை; அரசுப்பள்ளிகளில் இரவு காவலர்கள் நியமிப்பதில், அரசு அலட்சியமாக இருப்பதால் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. மேலும் அரசின் சார்பில் நலத்திட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன.தற்போது அனைத்து பள்ளிகளிலும், ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, அவர்களின் கல்வி மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும் அரசு பள்ளிகளில் அவற்றை பாதுகாப்பதற்கு, இரவு காவலர்களும் இல்லை.அரசுப்பள்ளிகளில் இரவு காவலர் நியமிக்கப்படாமல் இருப்பதால், பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து நடக்கிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், துவக்கம் முதல் மேல்நிலை வரை, 300 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், இருபது சதவீதம் பள்ளிகளில் மட்டுமே இரவு காவலர்கள் உள்ளனர்.அவர்களும் பள்ளி நிர்வாகத்தினர் அல்லது மேலாண்மை குழுவினர் சார்பில் நியமிக்கப்பட்டவர்களாக உள்ளனர். சமீபத்தில், இப்பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் வெளிநபர்கள் நுழைந்து, ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அத்துடன் ஆசிரியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்குள் யார் நுழைவது, யார் வெளியில் செல்வதை என்பதை கண்காணிப்பதற்கு ஆட்கள் இல்லாதது, இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் வசதி ஒரு சில பள்ளிகளில்தான் உள்ளது. மற்ற பள்ளிகளில் பாதுகாப்பிற்கு எந்த வசதியும் கிடையாது. இதனால் மாணவர்கள் இடைவெளி நேரங்களில் வெளியில் சென்றுவிடுகின்றனர்.மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டி வருகிறது. இதனால் பாடவேளைகள் பாதிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலைதான் உள்ளது.இரவு காவலர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்க, அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !