உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கோவில் மேம்பாடு பா.ஜ. வேண்டுகோள்

 கோவில் மேம்பாடு பா.ஜ. வேண்டுகோள்

பல்லடம்: பா.ஜ. மாவட்ட ஊடகப்பிரிவு துணைத் தலைவர் வித்யப்பிரகாஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில், தேர்த்திருவிழாவின்போது, கரடு முரடாக இருக்கும் கிரிவலப்பாதை வழியாகத்தான் தேர் செல்கிறது. என்.எச். ரோட்டில் இருந்து, கோவிலுக்கு செல்லும் பாதை மண்வழித்தடமாக உள்ளதால், மழைக்காலங்களில் சேறும் சகதியும் ஏற்பட்டு, பக்தர்கள் சிரமப்படுகின்றனர். தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்று இடத்தில் புதிய திருமண மண்டபம், கழிப்பிடம் கட்ட வேண்டும். எனவே, கிரிவலப் பாதையை சீரமைப்பதுடன், என்.எச்., ரோட்டில் இருந்து கோவிலுக்கு வரும் பாதையில் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ