ரூ.2.50 கோடி மதிப்புகோவில் நிலம் மீட்பு
திருப்பூர்; காங்கயம் தாலுகா, நத்தாகடையூர், அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான முள்ளிபுரம் கிராமத்தில் கோவில் நிலம் மீட்கப்பட்டது.அங்குள்ள சர்வே எண்.385/2ல் உள்ள, 4.86 சென்ட் புஞ்சை நிலம், 3,200 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடம் நீங்கலாக, எஞ்சிய நிலம் மட்டும், கோவில் வசம் மீட்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 3,200 ச.அடி பரப்பளவு கொண்ட கட்டடம் 'சீல்' வைக்கப்பட்டு, சொத்து முழுவதும் கோவில் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. 'ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, 2.50 கோடி ரூபாய்' என, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.