மேலும் செய்திகள்
பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
06-Apr-2025
திருப்பூர்; ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்கள் சார்பில், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில், தினமும் 50 பக்தர்களுக்கு அன்னதானம், வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்களிப்புடனும் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டிலும், குறிப்பிட்ட ஒரு நாளில் அன்னதானம் வழங்க, 35 ஆயிரம் ரூபாய் 'டெபாசிட்' செலுத்தும் வசதியும் உள்ளது.தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. அறங்காவலர் குழுவினர், அதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளனர். கடும் இட நெருக்கடியாக இருப்பதால், அன்னதான கூடத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.''வீரராகவப்பெருமாள் கோவிலின், வடமேற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில், சமையல் அறையுடன் இணைந்த அன்னதான கூடம், பெருமாள் கோவில் வளாகத்தில் கோவில் அலுவலகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். டெண்டர் பணிகள் முடிந்த பிறகு, அதற்கான பணிகள் துவங்க உள்ளது.பக்தர்கள் வசதிக்காக, ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில், கழிப்பறை வசதி செய்யப்படும். பசுக்களுக்கு, வசதியான கோசாலை அமைக்கும் பணியும் விரைவில் துவங்கும். தேர் ஸ்தபதிகளை கொண்டு, தேர் பராமரிப்பு பணியும் செய்துள்ளோம்'' என்கின்றனர் கோவில் அறங்காவலர்கள்.
06-Apr-2025