இரவில் பூத்த பிரம்ம கமலம்
பல்லடம்; இரவில் மட்டுமே பூக்கக்கூடிய அபூர்வ வகை தாவரம் பிரம்ம கமலம். பல்லடம் அடுத்த, புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி அங்கம்மாள், 68. இவர், தனது வீட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு, 9.00 மணிக்கு, இதில் பூ பூத்து நறுமணம் வீசியது. இதை, அங்கம்மாள் குடும்பத்தினர் உட்பட, அக்கம் பக்கத்தினரும் வந்து அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.