உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காத பாலிதீன் அகற்றுவதில் சவால்; சமாளிக்க உதவும் செயலாக்க மையம்

மக்காத பாலிதீன் அகற்றுவதில் சவால்; சமாளிக்க உதவும் செயலாக்க மையம்

திருப்பூர்; தொழிற்சாலை, நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும், உலர்ந்த பாலிதீன் கவர் உள்ளிட்ட பொருட்களை, எரிபொருள் தேவைக்கென அனுப்பி வைக்கும் கட்டமைப்பை தனியார் நிறுவனத்தினர் ஏற்படுத்தி வைத்துள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுக்க, உள்ளாட்சி நிர்வாகங்களில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது தான், மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில், தினசரி, 800 டன் வரை குப்பை வெளியேறுகிறது. இதில், பாலிதீன் கவர் உள்ளிட்ட மட்காத குப்பை மட்டும், 50 சதவீத்தை தாண்டும் என கூறப்படுகிறது.காய்கறி கழிவு உள்ளிட்ட, மண்ணில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து உரம் தயாரிக்க முடியும். பாலிதீன் பாட்டில், தட்டு உள்ளிட்ட பாலிதீனால் தயாரிக்கப்படும் சிலவகை பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்க முடியும். ஆனால், மண்ணில் மட்கவும் செய்யாத, மறு சுழற்சிக்கும் உதவாத சிலவகை பாலிதீன் வகையறாக்கள் அதிகளவில் வெளியேறுகின்றன; இவற்றை கையாள்வது, சமாளிக்க முடியாத சவாலாக மாறியிருக்கிறது. விதிமீறல்ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில், இத்தகைய பாலிதீன் கவர், லேபிள், எலாஸ்டிக் உள்ளிட்டவை பெருமளவில் வெளியேறுகின்றன. திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, தினமும், 100 டன் பாலிதீன் குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள், அவற்றை கையாளும் பொறுப்பையும், அப்புறப்படுத்தும் பொறுப்பையும் தாங்களே ஏற்க வேண்டும்; நிறுவனங்களில் இருந்து அந்த குப்பைகள் வெளியே வரக்கூடாது என்பது தான். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் அந்த பொறுப்பை ஏற்பதுமில்லை; விதியை பின்பற்றுவதுமில்லை. செயலாக்க மையம் இந்நிலையில், கணக்கம்பாளையம் பொங்குபாளையம் பிரிவில் செயல்படும் நிறுவனத்தினர், மாநகராட்சியின் முதல் மற்றும் இரண்டாவது வார்டுகளில் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படும் உலர்ந்த பாலிதீன் வகையறாக்களை பெற்று, மூட்டையாக கட்டி, சிமென்ட் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.நிறுவன உரிமையாளர் வேல்முருகன் கூறுகையில், ''மண்ணில் மட்காத, மறுசுழற்சிக்கும் உதவாத, கடைநிலை பாலிதீனை தான் நாங்கள் வாங்கி, 'பண்டல்' செய்து எரிபொருள் தேவைக்காக சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறோம். அவற்றை வேறெந்த உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியாது. தினமும், 30 டன் பாலிதீன் தற்போது பெறுகிறோம். தினமும், 90 டன் வாங்கும் அளவுக்கு, எங்களிடம் கட்டமைப்பு உள்ளது. குன்னுார், நாமக்கல் உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள நிறுவனங்களில் இருந்தும் கூட, பாலிதின் குப்பைகளை எங்கள் வாயிலாக அகற்றப்படுகிறது. பாலிதின் சார்ந்த குப்பைகளை வெளியேற்றுவதில் சவால்களை சந்திக்கும் நிறுவனங்களுக்கு உதவ தயாராக உள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி