உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனு அளித்த தியாகி மகள்

மனு அளித்த தியாகி மகள்

திருப்பூர்; சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ், தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்தார். தியாகி ராமசாமியின் மகள் பிரேமாவதி. இவருக்குப் பதில், கணவர் பொன்னுசாமி, 69, குடியரசு தின விழாவில் கலெக்டரிடம் மனு அளித்தார். பிரேமாவதி தனது மனுவில், ''கணக்கம்பாளையத்தில் வசிக்கிறேன். எனக்கு கிடைக்கும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய், எனது மருத்துவ செலவுக்கே போதுமானதாக உள்ளது. எனது கணவரின் தொண்டையில் புற்றுநோய் கட்டி உள்ளது. நாங்கள் ஏழ்மையில் நிலையில் உள்ளோம். எனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள். அவருக்கு முதியோர் உதவித்தொகையும் வருவதில்லை'' என்று குறிப்பிட்டிருந்தார்.கலெக்டர், மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை