மேலும் செய்திகள்
தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
26-Jul-2025
உடுமலை; கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி தலைமை வகித்தார். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் உணவு திருவிழாவில் பங்கேற்றனர். இளநீர் அல்வா, மோமோஸ், சிறுதானிய உருண்டைகள், வாழைப்பழ பஜ்ஜி உட்பட 50க்கும் மேற்பட்ட உணவுகளை தயார்படுத்தி காட்சிப்படுத்தினர். தொடர்ந்து ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் படைப்புகள் இடம் பெற்றன. 'சந்திரயான் மாதிரி வடிவம், இதயம் இயங்கும் நிலை, ஜே.சி.பி., மாதிரி வடிவம், உடல் உறுப்பு மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றன. பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
26-Jul-2025