வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாவம்... 2023 லேயே அல்லாருக்கும் வூடு குடுத்து முடிச்சாச்சு. இவிங்க மிஸ் அண்ணிட்டாங்க.
உடுமலை; உடுமலை அருகே, தமிழக அரசால் கட்டித்தரப்பட்ட வீடுகள் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாததால், மேற்கூரை இடிந்து, வானமே கூரையாய் வனப்பகுதியில் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு, கோடந்துார் மலைவாழ் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது கோடந்துார் மலைவாழ் குடியிருப்பு. இப்பகுதி மக்களுக்காக தமிழக அரசு, 1980ல், 60 வீடுகள் கட்டியது. சுவர்களில் விரிசல்
நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் இந்த வீடுகள், தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. மேற்கூரை மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்துள்ளதால், அவ்வீடுகளின் அருகிலேயே தற்காலிக குடிசை அமைத்து வசிக்கின்றனர். சுமார், 30க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து காணப்படுகிறது.சிலர், மேற்கூரையில் தகர, 'ஷீட்' அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் வேதனை
வனப்பகுதியில் சிறு பொருட்கள் சேகரித்தல், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் அருகில் தற்காலிக கடை அமைப்பதன் வாயிலாக, குறைந்த வருவாய் ஈட்டி வரும் மக்கள், சொந்த செலவில் வீடுகளை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.வனப்பகுதியில் அச்சத்துடன் வசிக்கும் தங்களுக்கு வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தமிழக அரசு கடந்த, 2021ல், மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்கவும், அம்மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்கியது.இந்த ஆணையம் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், தங்களின் பிரச்னைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்பதே மலைவாழ் மக்களின் வேதனை.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கூறுகையில், ''கோடந்துார் உள்ளிட்ட மலைவாழ் கிராம குடியிருப்புகளில், சேதமடைந்துள்ள வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, 110 வீடுகளை புதுப்பிக்க பழங்குடியினர் நல ஆணையத்துக்கும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் கருத்துரு சமர்ப்பித்துள்ளோம். நிதி ஒதுக்கப்பட்டதும், பணிகள் துவங்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
பாவம்... 2023 லேயே அல்லாருக்கும் வூடு குடுத்து முடிச்சாச்சு. இவிங்க மிஸ் அண்ணிட்டாங்க.