உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க

கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க

உடுமலை; உடுமலை கணபதிபாளையம், ராகல்பாவி, வெனசப்பட்டி, குறிஞ்சேரி, பொட்டையம்பாளையம், கொங்கல்நகரம், விருகல்பட்டி, புதுப்பாளையம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், களிமண் விளைநிலங்கள் உள்ளது.இந்த நிலங்களில், வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. நடப்பு சீசனில், குறைந்தளவே கொண்டைக்கடலை விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அறுவடை காலத்தில் ஏற்படுத்தப்படும் விலை வீழ்ச்சியே, முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: அறுவடை சீசனில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டைக்கடலை இறக்குமதி செய்யப்படுவதே விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.'கருப்பு சுண்டல்' எனப்படும் கொண்டைக்கடலை பல்வேறு சத்துகளை உள்ளடக்கியதாகும். பள்ளிகளில், மாணவர்களுக்கு புரதச்சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வழங்கலாம்.இதற்கு தேவையான கொண்டைக்கடலையை, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யலாம். ரேஷன் கடைகளிலும், விற்பனை செய்யலாம். இதனால், விலை வீழ்ச்சி தவிர்க்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள். சாகுபடி பரப்பும் குறையாது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ