உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்சிப்பொருளாக உள்ள தானிய கிடங்கு கட்டடம்

காட்சிப்பொருளாக உள்ள தானிய கிடங்கு கட்டடம்

உடுமலை; உடுமலை அருகே, காட்சிப்பொருளாக உள்ள உணவு தானிய கிடங்கு கட்டடத்தை மாற்று பயன்பாட்டுக்காக வழங்க வேண்டும்.உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வி.புரத்தில், 2014-15ம் ஆண்டில், ஊராட்சி உணவு தானிய கிடங்கு கட்டடம் கட்டப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம், தற்போது பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது.கட்டுமான பணிகள் முடிந்தது முதலே பயன்பாடு இல்லாமல், கட்டடம் வீணாகி வருகிறது. தற்போது கட்டடம், கால்நடைகள் கட்டும் இடமாக பயன்படுத்தப்படுகிறது.உடுமலை ஒன்றிய நிர்வாகம், இக்கட்டடத்தை ஊராட்சி சார்ந்த பிற பணிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பல லட்ச ரூபாய் அரசு நிதி வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரவு நேரங்களில், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதை தடுக்க, கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ