உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை

மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை

திருப்பூர்; பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு பள்ளி வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், விவசாய நிலம், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பொது இடங்களில் நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது. விவசாயிகள், குறுகிய இடைவெளியில் நிறைவான வருவாய் தரும் சவுக்கு உள்ளிட்ட மரவகைகளை தேர்வு செய்து வளர்த்து வருகின்றனர்.திருப்பூர் ரவுண்ட்டேபிள் உறுப்பினர்கள் மற்றும் திருப்பூர் பெண்கள் வட்டம் அமைப்பு சார்பில், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.மந்தாரை, பூவரசு, நீர்மருது, மகாகனி, இலுப்பை மரக்கன்றுகள் வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டது. ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள், பெண்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி