வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கட்சிக்காரங்களா... கொடிமரத்த அகற்றிவிட்டு நல்க மரக்கன்றுகளை நடுங்க. நாடும், மண்ணும் வாழ்த்தும். உங்க கொடிங்க காத்தில்லாமல் தொங்கிக் கிடக்குது.
பல்லடம்; ஐகோர்ட் உத்தரவையும் மீறி, பல்லடத்தில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.பொது இடங்களில், தெருக்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதற்காக, 12 வாரங்கள் காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவுக்குள் கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை எனில், அதற்கான செலவுகளை, சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது இடங்களில், அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.ஐகோர்ட் உத்தரவின் படி, ஏப்., 21ம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பல்வேறு இடங்களில் இன்னும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமலேயே உள்ளன. அவ்வகையில், பல்லடம் வட்டாரப் பகுதியில், பஸ் ஸ்டாப், தெருக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் என, பல்வேறு இடங்களிலும் கொடிக்கம்பங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. குறிப்பாக, பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள்தான் இந்த உத்தரவை பின்பற்ற மறுக்கின்றன.அரசியல் ரீதியான அழுத்தம் ஏற்படும் என்பதால், அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஐகோர்ட் உத்தரவை அவமதிக்கும்படியாக கொடி கம்பங்களை அகற்றாதது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும் மவுனம் காத்து வருகின்றனர். கோர்ட் உத்தரவை மீறும் இச்செயலால், எதிர்காலத்தில் விதிமீறல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்ற உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சிக்காரங்களா... கொடிமரத்த அகற்றிவிட்டு நல்க மரக்கன்றுகளை நடுங்க. நாடும், மண்ணும் வாழ்த்தும். உங்க கொடிங்க காத்தில்லாமல் தொங்கிக் கிடக்குது.