உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆனி திருமஞ்சனம்; திருவாசகம் முற்றோதல்

ஆனி திருமஞ்சனம்; திருவாசகம் முற்றோதல்

திருப்பூர்; திருப்பூர், கரட்டாங்காடு, குலால சமுதாய முன்னேற்ற சங்கத்தில், ஆனி திருமஞ்சன விழா நேற்று நடந்தது.கரட்டாங்காடு மண்டபத்தில், அதிகாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், மாணிக்கவாசகர், திருநீலகண்ட நாயனார் மற்றும் ரத்தினாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரபூஜை நடந்தது.தொடர்ந்து, உடுமலை அய்யாசாமி குழுவினர் முன்னிலையில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், திருவாசகம் முற்றோதல் செய்தனர். மதியம், அன்னம்பாலிப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை