மேலும் செய்திகள்
இமாகுலேட் கல்லுாரியில் கம்பன் கழக பெருவிழா
18-Aug-2025
திருப்பூர்; திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், ஆண்டு தோறும் கம்பன் விழா நடத்தப்படுகிறது; அதன்படி, 2025ம் ஆண்டு கம்பன் விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. ஏற்பாடுகளை கம்பன் கழக தலைவர் நாகராஜன், அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். மாணவருக்கான பேச்சுப்போட்டியில், ஏ.வி.பி., பள்ளி மாணவி மதுமிதா முதல் பரிசும், ஆதர்ஷ் பள்ளி மாணவி வைஷ்ணவி லட்சுமி இரண்டாவது பரிசும், வித்ய விகாஷ் பள்ளி மாணவி கோமதி மூன்றாவது பரிசும் பெற்றனர். ஆசிரியர் பிரிவில், வீரபாண்டி அரசு பள்ளி ஆசிரியர் கோகிலா முதல் பரிசும், அமிர்த வித்யாலயா பள்ளி ஆசிரியர் ஷாலினி இரண்டாவது பரிசும், வி.கே., அரசு பள்ளி ஆசிரியர் குமரேசன் மூன்றாவது பரிசும் பெற்றனர். திருப்பூர் கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், '' திருப்பூரில்,'கம்பன் விழா -2025', வரும், 31ம் தேதி, ஹார்வி குமார சாமி மண்டபத்தில் நடக்கிறது. கம்பன் விழாவை முன்னிட்டு நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். இம்முறை, வெற்றி பெற்றவர்களுக்கு, மறைந்த பரணி நடராஜன் நினைவாக ரொக்கப்பரிசு வழங்கப்படும்,'' என்றார்.
18-Aug-2025