உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்

அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்

அவிநாசி: அவிநாசி, மாமரத் தோட்டம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ், 43. கருவலுார் அருகே காளிபாளையம் பகுதியில் வசித்தவர் கோவிந்தசாமி,54.ரமேஷ், கோவிந்தசாமி இருவரும் உறவு முறையில் அண்ணன், தம்பி ஆகின்றனர். கடந்த பிப்., 20ம் தேதி கோவிந்த சாமியை காணவில்லை என அவரது மகன் பிரவீன் குமார் அவிநாசி போலீ ஸில் புகார் அளித்தார்.போலீசாரின் தீவிர விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு குறித்து பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோவிந்தசாமியைரமேஷ் பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார்.அதில், கோவிந்தசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். கோவிந்தசாமி உடலை யாருக்கும் தெரியாமல் கருவலுார் அருகே அனந்தகிரியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கோழி பண்ணையில் வைத்து கைகள்,கால்கள், தலை என தனித்தனியாக வெட்டி வெவ்வேறு பகுதியில் ரமேஷ் வீசினார்.அதில் தொரவலுார் குளத்தில் இருந்து உடல் பகுதியும் ரமேஷின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தலை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.ரமேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு கொடுங்குற்றம் இழைத்த ரமேைஷ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் பரிந்துரைத்தார்.அதனடிப்படையில் கலெக்டர் கிறிஸ்துராஜ், ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள ரமேஷூக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை