உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  கடல் கடந்தும் பரதம் மீது நீங்காத பாசம்

 கடல் கடந்தும் பரதம் மீது நீங்காத பாசம்

தி ருப்பூர் - டிமாண்ட் வீதியை சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் நந்தகுமார். தம்பதிக்கு லக் ஷிதா, தக் ஷிதா என இரு மகள்கள். மீனா அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலம் சான்டியாகோ பகுதியில் பொறியியல் கல்லுாரியில், விரிவுரையாளர். நந்தகுமார், மருத்துவ துறை ஆராய்ச்சியாளர். லக் ஷிதா கல்லுாரியிலும், தக் ஷிதா பள்ளியிலும் படிக்கின்றனர். கடும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும், கலிபோர்னியாவில், ஸ்ரீமதி சுமன் நாயக் என்பவரிடம் கடந்த ஒன்பது ஆண்டாக மீனாவும் அவரது இரு மகள்களும் பரத நாட்டிய பயிற்சி பெற்றனர். மூவரின் நடன அரங்கேற்றம் அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. சென்னையில் தற்போது நடைபெறும் மார்கழி உற்சவ விழாவில் பங்கேற்று தங்கள் பரத நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்ய வருகை புரிந்துள்ளனர். வரும் 30ம் தேதி இம்மூவரின் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மீனா கூறியதாவது: பரத கலையில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் ஏற்பட்டது. என்னுடன் என் மகள்களும் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். இப்போது நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் பரத நிகழ்ச்சியை அரங்கேற்றினோம். இருப்பினும் பரதத்தின் பிறப்பிடமான நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக நாங்கள் அனைவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் வந்துள்ளோம். பரதத்தின் வாயிலாக இந்தியாவின் பெருமையை அமெரிக்காவில் நிலைநாட்டுவதோடு, அந்நாட்டு நண்பர்களிள் மத்தியில் எங்கள் மீதான மதிப்பும் கூடியுள்ளது. அமெரிக்கர்கள் பலரும் கூட பரதத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி