மேலும் செய்திகள்
இன்று இனிதாக
25-Jan-2025
உடுமலை, ;உடுமலை வி.வி., லே-அவுட் புனித செபஸ்தியர் ஆலயத்தில் 'புனிதர்களின் நினைவு பொருட்கள்' கண்காட்சி நடந்தது.கத்தோலிக்க கிறிஸ்துவ சபையில் முன்னுதாரணமாக வாழ்ந்து உயிரிழந்த புனிதர்களின் நினைவு பொருட்கள் கார்லோ அகுடிஸ் அறக்கட்டளை சார்பில், பல்வேறு ஆலயங்களில் கண்காட்சிக்கு வைகக்கப்பட்டு வருகிறது. இதன்படி, உடுமலை வி.வி., லே-அவுட் பகுதியில் உள்ள புனித செபஸ்தியர் ஆலயத்தில், 1,509 புனிதர்களின் நினைவுப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியானது காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை 7:00 மணி வரை நடந்தது.ஆலயத்தின் பங்குதந்தை அருட்பணி பென்ஜோ மற்றும் நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
25-Jan-2025