மேலும் செய்திகள்
லட்டு தேரில் தங்க கவசத்தில் ஜொலித்த அன்னபூரணி
01-Nov-2024
உடுமலை; உடுமலை அன்னபூரணி நகர் பூங்கா பாரமரிப்பு இல்லாமல், புதர் மண்டி காணப்படுகிறது.உடுமலை நகராட்சி அன்னபூரணி நகரில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பூங்கா நிலத்தில், நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சுவர், நடை பயிற்சிக்கான பாதை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது.தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும், புதர் மண்டி காணப்படுகிறது.விளையாட்டு உபகரங்கள், கட்டுமானங்கள் உடைந்தும், சிதிலமடைந்தும் வருகிறது. எனவே, பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவும், நகராட்சி சார்பில் பூங்கா பராமரிப்புக்கு பணியாளரை நியமித்து, முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Nov-2024