உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருட வந்த நபர் சிக்கினார்

திருட வந்த நபர் சிக்கினார்

காங்கயம், பொத்திபாளையத்தை சேர்ந்தவர் சுப்புகுட்டி, 68. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி வெளியே துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை, 2:00 மணியளவில் நாய் குரைத்தது. சுப்புகுட்டி எழுந்து பார்த்தார். ஒருவர் வீட்டு பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து, 'திருடன், திருடன்' என சத்தம் போட்டார். பொதுமக்கள் வருவதை பார்த்த நபர், தோட்டத்துக்குள் சென்று மாயமானார். பின், காலை, 6:00 மணிக்கு கிணற்றில் ஒருவர் விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்று பார்த்தனர். காங்கயம் தீயணைப்பு வீரர்கள் மூலம் கிணற்றில் விழுந்த நபரை மீட்டனர். வீட்டுக்கு திருட வந்த நபர் என்பது தெரிந்தது. நாமக்கல்லை சேர்ந்த சக்திவேல், 46 என்பவரிடம் காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ