| ADDED : மார் 02, 2024 11:34 PM
விளையாட்டு விடுதி அமைத்தால் தான், இங்கேயே தங்கி பயிற்சி பெற ஆர்வமுடன் வருவர். ஆனால், மாவட்டம் உருவாகி, 15 ஆண்டுகள் கடந்தும் இங்கு விளையாட்டு விடுதி இல்லை. பல இடங்களை தேடி ஆராயும் பணி ஒவ்வொரு ஆண்டும், காகித அளவிலேயே இருக்கிறது.மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் போதிய அளவில் உள்ளது. பற்றாக்குறை உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர் மூலம் சமாளிக்கின்றனர்.
ஆனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையி, நடுநிலைப்பள்ளி அளவில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. 25 முதல், 35 பள்ளிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆறு முதல், எட்டாம் வகுப்பு அளவில் மாணவரை, வீரராகவும், மாணவியை, வீராங்கனையாகவும் தயார்படுத்தினால் தான், தொடர் பயிற்சி அளித்து, நான்கு, ஐந்து ஆண்டுகளில் பள்ளி படிப்பை முடிக்கும் போது, ஒரு சிறந்த வீரர்/வீராங்கனையாக மாற்ற முடியும். அதற்கும், திருப்பூர் மாவட்டத்தில் வசதியில்லாத நிலை உள்ளது.