மேலும் செய்திகள்
சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கும் பணி விறுவிறு
21-May-2025
அவிநாசி : அவிநாசி - சேவூர் சாலையில் உள்ள கருமாபாளையம் கிராமத்துக்கு செல்லும் பாதையின் இடையே, தரைப்பாலம் உள்ளது; இதை கடந்து தான், கிராமத்துக்குள் இருக்கும் வீடுகளுக்கு செல்லும் பிரதான பாதை. பெருமழையின் போது, இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கும்; இதனால், வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும்; இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை செலுத்தவே முடியாது. அங்குள்ள குட்டையை ஒட்டியிருந்த தடுப்புச்சுவரும் இடிந்து விழும் நிலையில் இருந்தது; இது, இங்குள்ள மக்களும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.கருமாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பூங்கொடி சக்திவேல் கூறுகையில், ''மழைக்காலத்தில் தரைப்பாலம் துண்டிப்பு என்பது, பேரிடர் பாதிப்பாகவே இருந்து வந்தது. இங்குள்ள தரைமட்ட பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காதநிலையில், கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், மழையின் போது தரைப்பாலம் மழைநீரில் மூழ்கி, ரோடு துண்டிக்கப்பட்ட செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது; அதன் விளைவாக, 2024 - 2025ல், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 29 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டு, தற்போது பாலம் உயர்த்தி கட்டி முடிக்கப்பட்டது; இதன் வாயிலாக, மழைக்கால தவிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கிறது,'' என்றார்.
21-May-2025