மேலும் செய்திகள்
துாய்மை பணியில் பா.ஜ., கட்சியினர்
14-Aug-2025
அவிநாசி, ; அவிநாசி, கஸ்துாரிபா வீதியில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பா.ஜ.,வினர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். நகர தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று துாய்மை பணியாற்றினர். அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில், தெக்கலுார் - வெள்ளாண்டிபாளையத்தில் விநாயகர் கோவிலில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிய பொதுச் செயலாளர் யுவராஜ் கண்ணன் தலைமையில் துாய்மை பணிகள் நடைபெற்றது. மரக்கன்றுகளும் நடப்பட்டது. கணியாம்பூண்டியில் உள்ள அங்கன்வாடியில் சக்தி கேந்திர பொறுப்பாளர் பூபதி தலைமையில் துாய்மை பணிகள்நடைபெற்றது.
14-Aug-2025