வாலிபாலில் வெற்றியை வசீகரித்த ஸ்பார்டன்ஸ் அணி
திருப்பூர்: திருப்பூரில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிப் படுத்தி சிறப்பாக விளையாடினர்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கான இறகு பந்து போட்டி எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. 314 மாணவர்களும், 108 மாணவியரும் பங்கேற்றனர். மாணவர்களுக்கான போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் துவக்கி வைத்தார். மாணவிகளுக்கான போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் துவக்கி வைத்தார்.மாணவியர் ஒற்றையர் பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி கிருத்திகா முதலிடம், விக்னேஸ்வரா வித்யாலயா சங்கமித்ரா இரண்டாமிடம் மற்றும் ராதிகாஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தனர்.இரட்டையர் பிரிவில், ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா ரித்திகா ஸ்ரீ - சங்கமித்ரா முதலிடம், பிரன்ட்லைன் பள்ளி ரித்திகா - கிருத்திகா இரண்டாமிடம், உடுமலை சீனிவாச வித்யாலயா பள்ளி ஷர்மிதா - மதுவதனி மூன்றாமிடம் பிடித்தனர். வாலிபால்
பொதுப்பிரிவினருக்கான வாலிபால் போட்டி, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், பெண்கள் பிரிவில், ஐந்து அணிகள் பங்கேற்றன. திருப்பூர் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலிடத்தையும், 'டிரிப்பி' கேர்ள்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், ரெயின்போ குயின்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டிகள் நேற்று காயத்ரி மஹாலில் துவங்கியது. இதில், பங்கேற்கும் அணிகள் அதிகம் என்பதால், போட்டிகள் இன்றும் நடக்கிறது.