உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போஸ்டரில் வெளிப்பட்ட மாணவர்களின் எண்ணம்

போஸ்டரில் வெளிப்பட்ட மாணவர்களின் எண்ணம்

திருப்பூர்: தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவுத்தல் படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு -2 மற்றும் போதை எதிர்ப்புக்குழு இணைந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது எப்படி என்பது தொடர்பான போஸ்டர் தயாரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.என்.எஸ்.எஸ்., அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதை தடுப்பதற்கான தங்களின் யோசனைகளை போஸ்டர் வாயிலாக, வரைந்து விளக்கினர். இதில், சிறந்த கருத்துகளை பிரதிபலிக்கும் போஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் கல்லுாரியில் நடைபெறும் கண்காட்சியில் இடம் பெறும் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை