உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பக்தர்களின் உன்னத இறை சேவை

பக்தர்களின் உன்னத இறை சேவை

திருப்பூர், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், தன்னார்வலர்கள் இணைந்து உழவாரப் பணியில் ஈடுபட்டனர். தேசிய ஹிந்து திருக்கோவில் பவுண்டேசன் சார்பில், 336வது உழவாரப் பணியாக இது மேற்கொள்ளப்பட்டது. நிர்வாகிகள் சுரேஷ், சின்னராஜ், செந்தில்குமார், தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். கோபுரம், மதில்சுவர், மண்டபங்கள், பிரகாரங்கள், வாயில்கள், துாண்கள் மற்றும் தரை தளம் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டது. பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவையும் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.முன்னதாக இதில் பங்கேற்ற பக்தர்கள்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை