மேலும் செய்திகள்
திருட வந்த நபர் சிக்கினார்
01-Nov-2024
திருப்பூர்; காங்கயம், பொத்திபாளையத்தை சேர்ந்தவர் சுப்புகுட்டி, 68. கடந்த, 30ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே துாங்கி கொண்டிருந்தார்.நாய் குறைக்கும் சத்தம் கேட்டு பார்த்த போது ஒருவர் வீட்டு பூட்டை உடைத்து கொண்டிருந்தார். உடனே, சத்தம் போட்டதில், பொதுமக்கள் வருவதை பார்த்த அந்நபர், அருகிலுள்ள கிணற்றுக்குள், விழுந்து காயமடைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீசார் விசாரணையில், அந்த நபர் நாமக்கல்லை சேர்ந்த சக்திவேல், 46 என்பது தெரிந்தது. நான்கு நாட்களாக சிகிச்சையில் இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
01-Nov-2024