உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறுவை சிகிச்சை அரங்கம் வீணாகி வரும் அவலம்

அறுவை சிகிச்சை அரங்கம் வீணாகி வரும் அவலம்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி சார்பில், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பகுதியில் டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.நோயாளிகள் பயன்பாட்டுக்காக இந்த மையத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் இந்த வளாகத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில், அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும், இந்த அரங்கம் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வளாகத்தின் மேல் தளத்தில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் முடிந்து சில பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இப்பணிகள் நிறைவு பெறாமல் அறுவை சிகிச்சை அரங்கம் பயன்படுத்த முடியாது. எனவே, அவை விரைந்து முடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்கமும் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ