காத்திருப்பு போராட்டம் 62வது நாளில் நிறைவு
திருப்பூர்: பென்சன், பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடந்த ஆக., 18 ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் பல்வேறு மண்டல அலுவலகங்கள் முன்புறம் காத்திருப்பு போராட்டம் துவங்கினர். 62வது நாளாக நேற்றுமுன்தினம் போராட்டம் தொடர்ந்தது. திருப்பூர் மண்டல அலுவலக வாயிலில், போராட்டக்குழுவினர் கருப்பு தீபாவளி என்று போஸ்டர் ஒட்டினர். நேற்று முன்தினம் அமைச்சருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் நடந்த மேடை வெற்றி விழா மேடையாக மாறியது. முன்னாள் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு., சங்கம் ஆகியன சார்பில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டது. சங்க தலைவர் துரைசாமி, செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.